மேலும்

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, பாரதம், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார். மணிக்கொடி இதழை தொடங்குவதில் பங்கெடுத்தார் டி.எஸ்.சொக்கலிங்கம் சுஜாதா (மே 3, 1935 - பிப்ரவரி 27, 2008) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்கு இயந்திரத்தை கண்டுபிடித்த குழுவில் பணியாற்றியவர். சுஜாதா பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொதுவாசிப்புக்கான சமூகநாவல்களையும், வரலாற்று நாவல்களையும் எழுதிய எழுத்தாளர். திரைப்பட எழுத்தாளர். யோகி ராம்சுரத்குமார் வழிவந்த ஆன்மிகவாதி. இந்து ஆன்மிகம் சார்ந்த நூல்களையும் பக்திநூல்களையும் புராண மறுஆக்கக் கதைகளையும் எழுதியவர். தன் காலகட்டத்தின் பொதுவான உளநெருக்கடிகளையும் பாலியல்சிக்கல்களையும் ஆன்மிகத்தேடல்களையும் புனைவுகளாக்கியவர் என்பதனால் பெரும் வாசக எண்ணிக்கை கொண்ட படைப்பாளியாகத் திகழ்ந்தார் பாலகுமாரன் கண்ணதாசன் (ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981) தமிழ்க் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர், எழுத்தாளர், இதழாளர், அரசியலாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர். தமிழில் திரைப்படப்பாடல்கள் வழியாக பெரும்புகழ்பெற்ற கண்ணதாசன் திராவிட இயக்க ஆதரவாளராகவும் பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழில் குறுங்காவியங்கள், தனிப்பாடல்கள் எழுதினார். மரபுக்கவிதையில் எழுதிய முக்கியமான இறுதிக்கட்ட கவிஞர் என அறியப்படுகிறா கண்ணதாசன் சாரு நிவேதிதா (18 டிசம்பர் 1953) தமிழ் எழுத்தாளர். தமிழில் பின்நவீனத்துவ - பின் அமைப்பியல் சார்ந்த அழகியலைக் கொண்ட எழுத்தாளர்களில் முதன்மையானவராகவும், பிறழ்வெழுத்து என்னும் இலக்கியவகைமையின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். பலதுறைசெய்திகளை இணைத்து எழுதும் கலைக்களஞ்சியத்தன்மை, எழுத்தைப்பற்றியே எழுதும் மீபுனைவுத்தன்மை, அனைத்தையும் விளையாட்டாக ஆக்கும் தன்மை, ஒழுக்கவியல் எல்லைகளையும் அரசியல் சரிநிலைகளையும் மீறிச்செல்லும் தன்மை, அமைப்புகளுக்கு எதிரான கலகத்தன்மை ஆகியவற்றைக் கொண்ட எழுத்துக்களை எழுதியவராக அறியப்படுகிறார். சாரு நிவேதிதா எஸ். ராமகிருஷ்ணன் (ஏப்ரல் 13, 1966) தமிழில் சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம்,குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை சினிமா, ஊடகம், இணையம் ஆகிய தளங்களில் எழுதி வருபவர். உலக இலக்கியம் மற்றும் உலக சினிமா குறித்த உரைகள் நிகழ்த்திவருகிறார். எஸ். ராமகிருஷ்ணனின் ஆரம்பகட்ட கதைகள் கறாரான யதார்த்தவாத அல்லது இயல்புவாத வகைமையை சேர்ந்தவை. பின்னர் மாய யதார்த்தப் புனைவுகளை எழுதினார். கரிசல் நில மக்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தவர். எஸ்.ராமகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

Judgemnt of GRS