Posts

Showing posts from May, 2022

மேலும்

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, பாரதம், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார். மணிக்கொடி இதழை தொடங்குவதில் பங்கெடுத்தார் ட ி.எஸ்.சொக்கலிங்கம் சுஜாதா (மே 3, 1935 - பிப்ரவரி 27, 2008) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்கு இயந்திரத்தை கண்டுபிடித்த குழுவில் பணியாற்றியவர். சுஜாதா பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொது

ப்திவு

மறைமலையடிகள் (மறைமலை அடிகள், சுவாமி வேதாசலம். Maraimalai adikal) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடித் தலைவர். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி . சமயம், நவீன இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர். தமிழியம் என்னும் பண்பாட்டு- அரசியலியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். மறைமலை எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பிப்ரவரி 17, 1956) தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். வையாபுரிப்பிள்ளை த

கல்கி

ஐரோப்பிய நவீனத்துவம் மீது ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருந்த க.நா.சுப்ரமணியம் தமிழில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் நவீனத்துவ அழகியலை கொண்டுவர வாழ்நாளெல்லாம் முயன்றவர். முன்னோடியான நாவல்களை எழுதினார். இலக்கியத்திற்காக பொதுவாசிப்பு இதழ்களையும் பின்னர் சிற்றிதழ்களையும் நடத்தினார். இலக்கியப் பரிந்துரைகள், பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப்படைப்புகளை அடையாளம் காட்டினார். தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கவேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழில் ஓர் தனிமனித இயக்கம் போலவே செயல்பட்டார். க.நா.சு அ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட

ven,

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழிலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர். புனைவிலக்கியம், கவிதை, இலக்கிய விமர்சனம் ஆகிய துறைகளில் பங்களிப்பாற்றியவர். பசுவய்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். காலச்சுவடு இலக்கிய இதழின் நிறுவனர். இலக்கிய ஆளுமையாகவும், அழகியல் சார்ந்த இலக்கியப்பார்வையை முன்வைக்கும் சிந்தனைமரபின் தனது காலகட்டத்தின் மையமாகவும் திகழ்ந்தார். சுந்தர ராமசாமி அ. மாதவையா [அ. மாதவையர்] (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். இவருடைய பத்மாவதி சரித்திரம் தமிழில் வெளிவந்த முதற்காலகட்ட நாவல்களில் ஒன்று. பெண் கல்வி, பெண்களின் மறுமணம் ஆகியவற்றை முன்வைத்த சமூக சீர்திருத்தவாதி. ஆங்கிலத்திலும் கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியவர் அ.மாதவையா ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் தமிழகத்

விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம் விருது

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருத ு