கல்கி

ஐரோப்பிய நவீனத்துவம் மீது ஈடுபாடும் பயிற்சியும் கொண்டிருந்த க.நா.சுப்ரமணியம் தமிழில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகியவற்றில் நவீனத்துவ அழகியலை கொண்டுவர வாழ்நாளெல்லாம் முயன்றவர். முன்னோடியான நாவல்களை எழுதினார். இலக்கியத்திற்காக பொதுவாசிப்பு இதழ்களையும் பின்னர் சிற்றிதழ்களையும் நடத்தினார். இலக்கியப் பரிந்துரைகள், பட்டியல்கள் வழியாக ரசனை சார்ந்து இலக்கியப்படைப்புகளை அடையாளம் காட்டினார். தமிழ் இலக்கிய உலகம் கவனிக்கவேண்டிய படைப்புகளை மொழியாக்கம் செய்தார். புதுக்கவிதையின் அழகியல் வடிவத்தை அறிமுகம் செய்தார். தமிழில் ஓர் தனிமனித இயக்கம் போலவே செயல்பட்டார். க.நா.சு அ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட வெவ்வேறு பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்க முன்முயற்சி எடுத்தவர். சுந்தர ராமசாமி அ. முத்துலிங்கம் (ஜனவரி 19, 1937) முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என விரியும் அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் வடிவ ஒழுங்கும், கலையழகும், அங்கதத்தன்மையும் கொண்டவை. இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு வசித்த பல்வேறு நாடுகளின் பண்பாடுகளையும் , முரண்களையும், மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவந்த கதைசொல்லி. கனடா இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனர்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை உட்பட வெவ்வேறு பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் அமைக்க முன்முயற்சி எடுத்தவர். அ.மு அ. மாதவையா [அ. மாதவையர்] (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) தமிழின் தொடக்ககால நாவலாசிரியர்களில் ஒருவர். இவருடைய பத்மாவதி சரித்திரம் தமிழில் வெளிவந்த முதற்காலகட்ட நாவல்களில் ஒன்று. பெண் கல்வி, பெண்களின் மறுமணம் ஆகியவற்றை முன்வைத்த சமூக சீர்திருத்தவாதி. ஆங்கிலத்திலும் கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியவர். அ.மாதவையா பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. தமிழ்ப் பதிப்புலகத்தில் பொதுவாசிப்புக்குரிய நாவல் வகையில் பொன்னியின் செல்வன் நாவல்தான் முதலிடத்தில் உள்ளது. பொன்னியின் செல்வன் கல்கி (ரா. கிருஷ்ணமூர்த்தி, செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) தமிழில் பொதுவாசகர்களுக்கான பெரும்புகழ்பெற்ற கற்பனாவாதக் கதைகளை எழுதியவர். இந்திய தேசிய இயக்கத்தில் இருந்து உருவாகி வந்த படைப்பாளி. சுதந்திரப்போராட்ட வீரர். தமிழிசை இயக்கத்தை முன்னெடுத்தவர். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் உரைநடையின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று கற்பனாவாத நாவல்கள் தமிழ் பொதுவாசிப்புத்தளத்தைச் சேர்ந்த பெரும் செவ்வியல்படைப்புகள் எனப்படுகின்றன. கல்கி வார இதழை நிறுவியவர். தமிழில் கேளிக்கைசார்ந்த வாசிப்பையும் அதற்கான எழுத்துமுறையையும் உருவாக்கி நிறுவனப்படுத்தியவர் என்று அறியப்படுகிறார். கல்கி

Comments

Popular posts from this blog

கட்டுரைகள்