மரபுக்கவிதை ஜெயகாந்த் ராஜு

அன்புள்ள ஜெயமோகன் ,

 வணக்கம். 



என்னுடைய தேர்வுகளை கீழே கொடுத்திருக்கிறேன்.

1. 
ஒரு மொழியே பல மொழிக்கும்
இடங்கொடுக்கும் அந்த
    ஒரு மொழியே மலம் ஒழிக்கும்
ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு
மற்றைமொழி யெல்லாங்
     கோடின்றி வட்டாடல்
கொள்வதொக்குங் கண்டாய்
கருமொழியிங் குனக்கில்லை.
மொழிக்கு மொழி ருசிக்கக் கரும்பனைய சொற் கொடுனைக் காட்டவுங் கண்டனையேல் தரு மொழி யிங்குனக்கில்லை
யுன்னைவிட்டு நீங்காத் தற்பரமாயானந்தப்
பொற் பொதுவாய் நில்லே.
              -தாயுமானவர்.
2. நான்
ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
ஊரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும் வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!
வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்ற நிற்பது என்
இல்.
யாரோ நான்? “ஓ!ஓ!”
யாரோதான் என்றதற்கு
குரல்மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!
   - பிரமிள்.
3. மின்னல்.
ககனப் பறவை 
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்.
-பிரமிள்.
அன்புடன்,
ஜெயகாந்த்.

Comments

Popular posts from this blog

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

கட்டுரைகள்