அந்தியூர் மணி மரபுக் கவிதை அரங்கு

நண்பர்களே,

என்னுடைய மரபுப் பாடல் அரங்கிற்கான இரு கவிதைகள்

1.பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? 

(புறம்-12)
கூடவே புறநானூற்றின் 6,9,64 ஆகிய பாடல்களையும் ஒருமுறை படித்துக் கொள்ளவும்.


2.எள்கல் இன்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய்வாள்போல்
    உள்ளத்து உள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
    வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட
     கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே
                                                                                                         

 (திருமுறை 7-61-10)


இப்படிக்கு
அந்தியூர் மணி

Comments

Popular posts from this blog

மாரிராஜ் இந்திரன் தேர்வுசெய்த கதை-1

கட்டுரைகள்