அன்புள்ள நண்பர்களுக்கு ஊட்டி குருநித்யா ஆய்வரங்கம் மே மாதம் நிகழவிருக்கிறது. பங்கெடுப்பவர்களின் பட்டியல் முழுமையடைந்திருக்கும் என நினைக்கிறேன் கீழ்க்கண்ட வகையில் அரங்குகள் அமையலாமென்பது என் எண்ணம் முதல்நாள் வெள்ளி காலை 10 மணிக்கு முனி நாராயணப்பிரசாத் துவக்கவுரை 10 30- 12 வரை நாஞ்சில்நாடன்- கம்பராமாயண அரங்கு 12 முதல் 1230 வரை தேனீர் 1230 முதல் 2 வரை கவிதை அரங்கு [ வேணு வெட்ராயன், சாம்ராஜ், வி என் சூர்யா] 3 முதல் 5 வரை நாவல் குறித்த அரங்கு [ பாலாஜி பிருத்விராஜ்] 7 முதல் 9 வரை சிறுகதை அரங்கு [விஜயராகவன், பிரியம்வதா, அருணாச்சலம் மகாராஜன் ஆகியோர் தலா ஒரு சிறுகதை குறித்துப் பேசலாம்] இரண்டாம்நாள் சனி 930 -11 வரை கம்பராமாயணம் அரங்கு 1130 முதல் 130 வரை சிறுகதைகள் அரங்கு [ மாரிராஜ் இந்திரன், ஸ்வேதா, ஜி எஸ் வி நவீன் ஆகியோர் ஒரு சிறுகதை வீதம் முன்வைத்துப் பேசலாம்] 230 முதல் 4 மணிவரை மரபிலக்கியக் கவிதைகள் [ நண்பர் ஜயகாந்த் ராஜு, அந்தியூர் மணி] 430 முதல் 600 வரை சிறுகதைகள் [நவீன் மலேசியா , நிகிதா] 730 முதல் 930 வரை அறிவியல் புனைகதைகள் பற்றி. சுசித்ரா கம...