Posts

கட்டுரைகள்

   சுவாமி விபுலானந்தர்  இயற்றிய  மதங்க சூளாமணி யின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட  கூத்துநூல்விருத்தம்  எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார். ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால் 1960-ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து  நம்மாழ்வார்  தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். ந.சுபு ரெட்டியார் தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல்  வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான  பற்று கொண்டிருந்தனர். " தினமணி ' நாளிதழின் முன்னாள் ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கம் ,  எம்.எஸ். சுப்பிரமணியம் ,  சுந்தர ராகவன்  போன்ற பல எழுத்தாளர்கள்

கட்டுரைகள்

   ஆசிரியர்  வி.மரிய அந்தோனி  இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அருளவதாரம் ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர்  மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர்  எஸ்.ராமகிருஷ்ணன்  ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர்  வ.விஜயபாஸ்கர னுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார்.  ஜி.நாகராஜன் மயிலை சீனி.வெங்கடசாமி ‘ செந்தமிழ்ச்செல்வி ’, ’ ஆராய்ச்சி ’,  ஈழகேசரி ’, ‘ ஆனந்தபோதினி ’, ‘சௌபாக்கியம்’, ‘ செந்தமிழ் ’, ‘ திருக்கோயில் ', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘ தமிழ் நாடு ,', ‘ தமிழ்ப் பொழில் ’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். மயிலை சீனி.வேங்கடசாமி   மா கோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீச

புதியவை

  ராஜம் கிருஷ்ணன் (1925 - அக்டோபர் 21, 2014) தமிழில் நாவல்கள் சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர். இடதுசரிப்பார்வையும் பெண்ணியப்பார்வையும் கொண்டிருந்தார். வெவ்வேறு களங்களுக்குச் சென்று களஆய்வு செய்து தன் நாவல்களை எழுதுவது அவருடைய வழக்கம். கோவா விடுதலைப்போர், ஊட்டி படுகர்களின் வாழ்க்கை, தூத்துக்குடி உப்பளம் என மாறுபட்ட வாழ்க்கைச்சூழல்களை எழுதியவர். ராஜம் கிருஷ்ணன் விந்தியா(இந்தியா தேவி) (ஏப்ரல் 12, 1927 - அக்டோபர் 7, 1999) நவீன எழுத்தாளர். தன் இருபது வயதிலிருந்து பதின்மூன்று ஆண்டுகள்(1947-60) தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு நாவல், கட்டுரைகள் எழுதினார். அதன்பின் விந்தியா எழுதாமலானார். விந்தியா   மிழில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் முதல் ஏராளமான துப்பறியும் கதாபாத்திரங்கள் வந்திருந்தாலும் முதன்மையான ஆளுமைகள் கணேஷ் வசந்த் இருவருமே. துல்லியமாக வகுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவை கணேஷ் வசந்த் குமுதத்தில் 1953-ல் நடந்த சிறுகதைப் போட்டியில் வென்று அதன் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அழைப்பின் பேரில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.  குமுதம்  இதழில் ஆசிரியர்  எஸ்.ஏ.பி.அண்

women

அசலாம்பிகை அம்மணி அம்மாள் அழகியநாயகி அம்மாள் ஆர்.எஸ்.ராஜலட்சுமி அம்மாள் ஆர்.சூடாமணி ஆர்.பொன்னம்மாள் எஸ். விசாலாட்சி எஸ். அம்புஜம்மாள் கமலா சடகோபன் கமலா பத்மநாபன் கமலா விருத்தாசலம் கிருத்திகா கிருபா சத்தியநாதன் கி.சரஸ்வதி அம்மாள் கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப்புலவர் “தமிழ்ப்புலவர் வரிசை” என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். அதே போல தமிழகத்திலுள்ள சமண, பெளத்த தலங்களைப் பற்றிய தொகுப்புகளை ”தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்” போன்ற புத்தகங்கள் வழி ஏ. ஏகாம்பர நாதன் சாத்தியப்படுத்தியுள்ளார். ஈழத்து கூத்து கலைஞர்கள், கூத்துக்கலை பற்றிய தொகுப்புகளாக பேராசிரியர் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்”; ”கூத்த யாத்திரை” புத்தகங்கள் ஒட்டுமொத்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்கள் பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது. இப்படி தொகுப்பு நூல்கள் பலவகைகளில் வருகின்றன. சமீபத்தில் அழிசி ஸ்ரீநி “எழுத்து” இதழ்களை கிண்டிலில் குறிப்பிட்ட காலத்து வாசிப்பதற்கு இலவசமாக அளித்தார். இதழ்கள் வாயிலாக முன்னோடி  எழுத்தாளர்களின் கட்டுரைக

புதியபதிவுகள்

மு.வரதராசன் (ஏப்ரல் 25, 1912 - அக்டோபர் 10, 1974) (மு.வ./மு.வரதராசனார்) தமிழ் எழுத்தாளர், பழந்தமிழ் நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர், கல்வியாளர். தமிழகத்தின் புகழ்பெற்ற திருக்குறள் உரை மு.வரதராசன் எழுதியது. கல்வியாளராகத் தன் மாணவர்களிடம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியவராகத் திகழ்ந்தார். மு.வரதராசன் மீ.ப.சோமு (ஜூன் 17, 1921 - ஜனவரி 15, 1999) தமிழ் எழுத்தாளர். நாவல்களும் சிறுகதைகளும் மரபுக்கவிதைகளும் எழுதியவர். பண்ணிசை ஆராய்ச்சியாளர். இதழாளர். வானொலி நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணியாற்றினார். மீ.ப.சோமு பொன்னியின் செல்வன் (1950 – 1955) கல்கி எழுதிய பொதுவாசிப்புக்குரிய வரலாற்று நாவல். இது ஐந்து பாகங்களைக் கொண்டது. இராஜராஜ சோழர் என்று அழைக்கப்பட்ட அருண்மொழிவர்மன், தனக்குக் கிடைத்த சோழப் பேரரசின் அரியணையைத் தியாகம் செய்தமையை விவரிக்கிறது . ‘பொன்னியின் செல்வன்’ என்பது, இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று. தமிழ் வரலாற்றின் பொற்காலம் எனப்படும் சோழர் காலத்தையும், அதில் தலையாயவர் எனப்படும் ராஜராஜ சோழனையும் சித்தரிப்பதனால் தமிழகத்தில் மிகப்புகழ்பெற்ற நாவலாக இந்நூல் உள்ளது. த

மேலும்

டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 - ஜனவரி 6, 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, பாரதம், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார். மணிக்கொடி இதழை தொடங்குவதில் பங்கெடுத்தார் ட ி.எஸ்.சொக்கலிங்கம் சுஜாதா (மே 3, 1935 - பிப்ரவரி 27, 2008) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய தொடர்கதைகளையும் சிறுகதைகளையும் புகழ்பெற்ற பத்திகளையும் எழுதியவர். தமிழ் உரைநடையில் புதுமைகளை புகுத்தி மாற்றத்தை உருவாக்கியவர். தமிழில் அறிவியல்கதைகளை எழுதிய முன்னோடி. அறிவியலை அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர். பழந்தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். மின்னணுவியல் பொறியாளர். இந்திய வாக்கு இயந்திரத்தை கண்டுபிடித்த குழுவில் பணியாற்றியவர். சுஜாதா பாலகுமாரன் (ஜூலை 05, 1946 - மே 15, 2018) தமிழில் பொது

ப்திவு

மறைமலையடிகள் (மறைமலை அடிகள், சுவாமி வேதாசலம். Maraimalai adikal) (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடித் தலைவர். சைவத் திருப்பணியிலும், சீர்திருத்தப் பணியிலும் பெரும்பங்காற்றியவர். வைதீக விமர்சனம் செய்தவர். எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர், ஆசிரியர், இதழாளர், துறவி . சமயம், நவீன இலக்கியம், அறிவியல் ஆராய்ச்சி எனப் பலதுறைகளில் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்கள் எழுதியவர். தமிழியம் என்னும் பண்பாட்டு- அரசியலியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். மறைமலை எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பிப்ரவரி 17, 1956) தமிழறிஞர்,தமிழ் காலக்கணிப்பு, தமிழ்நூல் பதிப்பு, தமிழிலக்கிய வரலாற்றாய்வு ஆகிய தளங்களில் பெரும்பங்களிப்பாற்றிய முன்னோடி. இலக்கியத் திறனாய்வாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் .தமிழாய்வில் புறவயமான , பற்றற்ற முறைமையை வலியுறுத்திய வழிகாட்டி. தமிழின் முதல் பேரகராதியை உருவாக்கியவர். மலையாளப் பேரகராதியிலும் பங்களிப்பாற்றியவர். தமிழ் நவீன அறிவியக்கத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். வையாபுரிப்பிள்ளை த